ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை இன்று 22 ஆக உயர்ந்தது. வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 141 ஆக உயர்ந்தது.
தொடர்ந்து பாதிப்பு தீவிரமடைந்ததில் பலி எண்ணிக்கை 26 ஆகவும், பாதிப்பு எண்ணிக்கை 254 ஆகவும் உயர்ந்து உள்ளது. கொரோனா வைரசை ஒழிப்பதில் முன்னின்று பணியாற்றிய ஈரான் துணை சுகாதார மந்திரி இராஜ் ஹரீர்சிக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பது கடந்த செவ்வாய் கிழமை உறுதி செய்யப்பட்டது.
அந்நாட்டின் மகளிர் மற்றும் குடும்ப விவகாரங்களுக்கான துணை அதிபராக இருந்து வருபவர் மசவுமி இப்திகார். இவருக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனையில் பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
எனினும் அறிகுறிகள் குறைந்த தீவிரமுடன் உள்ளது என்றும் அதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.